70. அருள்மிகு கருணாகரப் பெருமாள் கோயில்
மூலவர் கருணாகரப் பெருமாள்
தாயார் பத்மாமணி நாச்சியார்
திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் அக்ரய தீர்த்தம்
விமானம் வாமன விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருக்காரகம், தமிழ்நாடு
வழிகாட்டி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிர்த்தெருவில் சுமார் அரை கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Ulagalandar Gopuram Tirukaragam Moolavarகார்ஹ மகரிஷிக்கு பகவான் காட்சியளித்ததால் இந்த ஸ்தலம் 'திருக்காரகம்' என்ற பெயர் பெற்றது.

மூலவர் கருணாகரப் பெருமாள், காரகத்தான் என்னும் திருநாமங்களுடன் அமர்ந்த திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு பத்மாமணி நாச்சியார் என்னும் திருநாமம். தாயார் சன்னதி தற்போது இல்லை. கார்ஹ மஹரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம்.


திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com